PUDHUMAI PENN SCHEME | புதுமை பெண் திட்டம் | Phase 2
புதுமை பெண் திட்டம்
தமிழக அரசு பெண்கள் அரசு பள்ளியிலிருந்து உயர்கல்வி பெறும் விகிதத்தை உயர்த்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- இது வரை 2, 3, மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.
- தற்போது இவ்வலைத்தளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
- மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
- மேலும், தற்போது 2, 3, மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் கல்லூரி மாணவிகள், முதற்கட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்கும் பொழுது ஆதார் எண், EMIS எண் வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யும் போது அவர்களின் ஆதார் OTP ஐப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களுடன் உறுதிப்படுத்தவும் மாணவிகள் உடனிருக்க வேண்டும்.
குறிப்பு: EMIS எண் இல்லாதவர்களும் பதிவு செய்யலாம்.
தகுதிகள்
- அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயன்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை (சுய மற்றும் வங்கி கணக்கு விவரங்களுக்காக)
- மாற்றுச் சான்றிதழ் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS NO)
தெரிந்துகொள்ள வேண்டியவைகள்
- ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண் இணைத்திருக்க வேண்டும்
- வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும்.
- கீழ்கண்ட ஏதேனும் ஒரு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.
- Indian Overseas Bank
- Indian Bank
- State Bank of India
- Canara Bank
Comments
Post a Comment