PUDHUMAI PENN SCHEME | புதுமை பெண் திட்டம் | Phase 2
புதுமை பெண் திட்டம் தமிழக அரசு பெண்கள் அரசு பள்ளியிலிருந்து உயர்கல்வி பெறும் விகிதத்தை உயர்த்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை இது வரை 2, 3, மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைத்தளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் . மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது . மேலும், தற்போது 2, 3, மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் கல்லூரி மாணவிகள், முதற்கட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்கும் பொழுது ஆதார் எண், EMIS எண் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி...